Saturday 20 October 2012

Text to Mp3 files

                  OFFLINE உரை ஒலி மாற்றி (TEXT to AUDIO Converter) என்ற பதிவில் ஆங்கில வார்த்தைகளை எப்படி ஒலி யாக மாற்றலாம் என்று பார்த்தோம். அனால் அந்த VB Script யை வைத்து கொண்டு உங்களால் MP3 file ஆக மாற்ற முடியாது. இனி கவலை வேண்டாம், நீங்கள் விரும்பிய text file யை MP3 file ஆகவும் மாற்றலாம். 

அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியவை, 

1.Panopreter_basic  என்ற software யை download செய்ய வேண்டும். CLICK Here to download the TEXT to MP3 file converter. File Size = 2.7MB.

2.அடுத்து setup  file  யை install செய்யவும்.

 

3.Install செய்த software யை open செய்யவும்.

 

4. இனி உங்களின் தேவைகேற்ப text  file  யை software இல் add செய்யவும்.

5. Speak button யை click செய்தால், அங்கேயே உச்சரிக்கும்.

6.Save to audio button யை click செய்தால், ".mp3" & ".wav" file ஆக save செய்துவிடும்.

சிறப்பு அம்சங்கள்:


                      Volume  & Speed யை control செய்ய தனி தனியே slider கள் கொடுக்க பட்டுள்ளது.

பயன் குறைவுகள்:

                    Speak button யை click செய்யும் போது text file இல் உள்ள text யை மட்டும் உச்சரிக்கும் இந்த மென்பொருள், Save to audio button யை click செய்யும் போது, save ஆன .mp3 & .wav file இல் முதல் 40 வினாடிகளுக்கு தன் மென்பொருளின் ad யும் சேர்த்து save  செய்து விடுகின்றது.

பயன் குறையை நீக்க:

                      இதனை நீக்க Windows Xp இல் default ஆக வரும் Windows Movie Maker யை


பயன் படுத்தி முதல் 40 விநாடிகளை யும்  நீக்கி விடலாம்.


                      இனி நீங்கள் விரும்பும் கதை, நாவல் களை Mp3 file ஆக மாற்றி உங்கள் I -Pod , Mobile களில் கேட்டு மகிழலாம். 


CLICK Here to download the TEXT to MP3 file converter. File Size = 2.7MB.















  









Friday 19 October 2012

Hyper Terminal in Windows 7 & Vista

                         நம்முள் பலர் Windows Xp இல் வரும் Hyper Terminal யை பயன் படுத்தி இருப்போம், பயன் படுத்தி கொண்டிருக்கிறோம் என்பது உண்மையே. இதே Hyper Terminal யை Windows  7 & Vista வில் பயன் படுத்த நினைக்கும் user களுக்கு ஏமாற்றமே, ஏன் எனில் Windows Xp இல் default ஆக வரும் Hyper Terminal, Windows  7 & Vista வில் default ஆக வருவதில்லை என்பதும்  உண்மையே.

                        அதற்காக இனி வருத்தம் வேண்டாம். Windows Xp இல் வரும் அதே Hyper Terminal யை எப்படி Windows  7 & Vista விலும் பயன் படுத்தலாம் என்பதை அறிய மேலும் படிக்க...

                          பழைய Windows Xp Installation CD இல் இருந்து “hypertrm.dll” &“hypertrm.exe”என்ற file யை  copy செய்து Windows  7 & Vista வில் பயன் படுத்தலாம். அனால் நம்முள் பலரிடம்  Windows Xp Installation CD யே இருபதில்லை, எங்கள் company யிலும் அப்படி தான். எல்லாம் திருட்டு VCD மாதிரி crack  OS  தான்.

                         CD இல்லை என்றாலும் கவலை வேண்டாம். கீழே கொடுக்க பட்டுள்ள link  யை click செய்யவும்.


CLICK HERE, to download the Hyper Terminal .exe.


CLICK HERE, to download the Hyper Terminal .exe.





Thursday 4 October 2012

IEC 61850: ICD Validation

         
             Click here to download the SCL Validator provided to check the conformity of your SCL-files to the schema of IEC 61850-6. All you need is to download the application, select your SCL-file in the application and get the validation result displayed. 



Installation
1. Download the application (see link below).
2. Run the downloaded .exe and select a path to extract the data to. 




Using the application 
1. Select the SCL-File (on your Hard disk) you would like to validate via the "Select" button. Select only one file.
2. Press the "Start Validation" button. Validation could take few minutes depending of the filesize of your SCL-file.
3. Result is given in the output part of the application.
4. A log file with all necessary information is created and can be opened by clicking on the displayed log file path. 



Requirements 
The IEC61850 SCL Validation Tool is a Microsoft Windows 32bit application requiring installed .NET Framework - Version 3.5. 



Click here to download the SCL Validator.



This SCL Validator is really usefull to validate your own ICD. This SCL Validation is one of the very important process in "CPRI/KEMA Certification". 

Disadvantage: This alone is not sufficient to test your ICD, Because it will miss some mistakes which will detect by "KEMA UniCAsim utility". 


This have been taken from Siemens website, so the full credit goes to the Siemens. And also this is the free utility, So you can use it on any time.

Wednesday 3 October 2012

பாரத ரத்னா விருது பெற்றோர்

"siruvarulagam.com" இல் இருந்து....




     பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

     இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

     1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

     சுதந்திர போராட்ட வீரரும் முதல் இந்திய கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்துக்கு முதலில் விருது வழங்கப்பட்ட போது, விருது வழங்கும் குழுவில் அவர் இருந்ததால், அவர் விருதை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் பின்னர் 1992 ஆம் ஆண்டு அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றோர் பட்டியல்
1. முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு

2. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

3. முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு

4. முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

5. முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா

6. ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்

7. கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)

8. முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா

9. முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்

10. புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்

11. முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்

12. முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்

13. முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா

14. லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்
15. இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்

16. வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா

17. கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

18. ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்

19. ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா

20. கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்

21. எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு

22. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா

23. நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா

24. ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி

25. சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்

26. மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்

27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்

28. ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா

29. சத்யஜித் ராய் (1922-1992) 1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்

30. ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931) 1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு

31. குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்

32. அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்

33. எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு

34. சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு

35. ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்

36. ரவி சங்கர் (b 1920) 1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்

37. அமர்த்தியா சென் (b 1933) 1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்

38. கோபிநாத் பர்தோலி (b 1927) 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்

39. பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்

40. லதா மங்கேஷ்கர் (பி 1929) 2001 - பாடகி - மகாராஷ்டிரா

41. பீம்சென் ஜோஷி (பி 1922) 2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா