Tuesday, 22 May 2012

சாதித்த மாணவர்கள் !!! : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு ; வழக்கம் போல் மாணவர்களே மாணவிகளுக்கு வழி விட்டனர்.....

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது, தேர்வாணைய துறை இயக்குனர் வசுந்தரா தேவி சென்னையில் பத்திரிக்கையாளர் மத்தியில் முதல் மற்றும் 2 , 3 ரேங்கு மாணவ, மாணவிகள் பட்டியலை வெளியிட்டார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிவடைந்தது. 3 லட்சத்து ,53 ஆயிரம் மாணவர்களும், 4 லட்சத்து 9 ஆயிரத்து 171 மாணவிகளும் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்த ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் இரண்டு மையங்கள் வீதம் 65 மையங்கள் அமைக்கப்பட்டு விடைதிருத்தும் பணி நடந்தது. இந்நிலையில் ஆவலுடன் எதிர்பார்த்த்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.

இந்த முடிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளே முதல் மூன்று இடத்தையும் பிடித்தனர். இதில் மொத்தம் முதலிடத்தை சுஸ்மிதா என்ற மாணவியும் , 2 ம் இடத்தை 3 பேரும் , இதில் இருவர் மாணவர், ஒருவர் மாணவி ஆவர். 3 ம்இடத்தை இரண்டு பேரும் பிடித்துள்ளனர். இந்த இருவரும் மாணவிகளே. மொத்தம் மாநில ரேங்குகளை பிடித்த 6 பேரும் நாமக்கல் இரண்டு இடங்களை பிடித்தனர். மாணவர்கள் பின்தங்கியே இருந்தனர்.

தேர்ச்சி விகிதம் எவ்வளவு? இன்றைய தேர்வு முடிவின்படி இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி விகிதம் 86. 7 சதம் ஆகும். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1. 1 சதவீதம் அதிகரித்துள்ளது.


இதில்

                                    மாணவர்கள் 83.2 சதமும்,
                                    மாணவிகள் 89.7 சதமும்

வெற்றி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment